நேபாள நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 13 ராணுவ விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 5 விமானங்கள் நேபாளம் சென்று சேர்ந்து உள்ளன மீதம் இரவுக்குள் சென்றுசேரும் என்று தகவல் அளித்துள்ளது.
ராணுவ விமானங்களை தவிர எர் இந்தியா விமானங்களும் மீட்பு பணியில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நேபாளத்தில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் 3 களமருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ பொறியியல் பிரிவும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு பிரிவின் 7 குழுக்களும் நேபாளம் அனுப்பப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு பிரிவின் மேலும் 6 குழுக்கள் விரைவில் நேபாளம் அனுப்பப்படும் என்றும் மீட்புப்பணிக்கு ராணுவத்துக்கு சொந்தமான 17 ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்துக்கு 22 டன் உணவுப்பொருள்
நேபாளத்துக்கு 22 டன் உணவுப்பொருள், 50 டன் குடிநீர் அனுப்பப்பட்டுள்ளது. 10 டன் போர்வைகளும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு செயலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
1173 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர்
நிலநடுக்கம் தாக்கியுள்ள நேபாளத்தில் இருந்து 1173 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். நேற்று 540 பேரும் இன்று காலை 237 பேரும் நேபாளத்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்தனர். 266 பேருடன் மற்றொருவிமானம் நேபாளத்தில் இருந்து வந்துகொண்டு இருக்கிறது என்றும் மேலும் ஒரு விமானம் நேபாளத்தில் 130 பேருடன் புறப்பட தயாராக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்மாண்டு விமான நிலையம் 4 மணி நேரம் மூடப்பட்டதால் மீட்பு பணிகள் தாமதமானது. விமான நிலையத்தில் காத்திருக்கும் அனைவரையும் மீட்பதாக இந்திய அரசு உறுதி அளித்துள்ளது.
0 comments:
Post a Comment