''உள்நாட்டில் கிரையோஜனிக் இன்ஜின் தயாரிப்பில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு இறுதியில், இந்தியாவின் முதல் கனரக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்,'' என, விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
நேற்று முன்தினம், இஸ்ரோவின் திரவ ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கிரையோஜனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, நான்கு டன் எடையுள்ள, கனரக செயற்கைக்கோள்களை, புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தும் திறனை, இந்தியா பெற்றுள்ளது. இதையடுத்து, முதல் கனரக செயற்கைக்கோள், வரும், 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும்.
வழக்கமாக, இதுபோன்ற செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். இனி, இந்தியாவில் இருந்தே அவை விண்ணில் செலுத்தப்படும். இதுவரை, 400க்கும் மேற்பட்ட செவ்வாய் கிரக படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ளது. இந்த வகை யில், விண்வெளி தொழில் நுட்பத்தில்இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, மேலும் பல திட்டங் களை செயல்படுத்த ஊக்குவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment