ஐ.சி.சி. ‘சேர்மன்’ பதவியிலிருந்து சீனிவாசனை நீக்க, பி.சி.சி.ஐ., திட்டம் வகுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு தேர்தலில் சீனிவாசன் ஆதரவுடன் தலைவரானார் டால்மியா. செயலர் தேர்வில் எதிரணியை சேர்ந்த அனுராக் தாகூர் வெற்றி பெற்றார். இவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
அனுராப் தாகூர், சூதாட்ட ‘புக்கி’ கிரண் கில்கோத்ராவுடன் நெருங்கி பழகுகிறார் என ஐ.சி.சி., குற்றம் சுமத்தியது. இதற்கு தாகூர் சார்பில் சீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக ஐ.சி.சி.,யில் இருக்கும் சீனிவாசனுக்கு ‘கல்தா’ கொடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.சி.சி., சேர்மன் பதவியை சீனிவாசன் இழக்க நேரிடும். இவரது பதவிக் காலம் வரும் 2016, ஜூன் வரை உள்ளது.
சீனிவாசனை நீக்குவது பற்றி விவாதிக்க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை முன்னதாக கூட்ட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல்., பைனல் நடக்க உள்ள மே 24ல் இக்கூட்டம் நடக்கலாம். இதில் 21 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே சீனிவாசனை நீக்க முடியும்.
சர்வதேச எதிர்ப்பு
பி.சி.சி.ஐ., தவிர, சர்வதேச அளவிலும் சீனிவாசனுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இவரை
ஐ.சி.சி., சேர்மன் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆதரவாக உள்ளன.
0 comments:
Post a Comment